Friday, December 11, 2009

காதல் சொன்ன நேரம் 2

கனவில் சொன்ன காதலில் தைரியம்
நேரில் இல்லையடி
உன் கண்ணை பார்க்கும் துணிச்சல் மட்டும்
எனக்கு இல்லையேடி
தயங்கி நிற்கின்ரேன் தவியாய் தவிக்கிரேன்
சொல்லுங்கள் என்று நீ
சொன்ன வார்த்தை மட்டும் சுவையாய், சுகமாய்
கேட் கிறது
ஆணுக்கு வீரம் உண்டு என்று எந்த மடையன்
சொன்னது என் மனசாச்சி என்னை கேலி செய்கிறது
நூறு கிலோ மீட்டர்வேகம் செல்லும் பேருந்தில்
ஓடி சென்று ஏறும் பொது வாராத பயம்
உண்கண்களை பார்த்து காதால் சொல்ல
ஏங்கும் போது வந்ததுஎன்ன
நா ன் என்று சொலும் பொது நடுங்கிய வார்த்தை
உன்னை என்று சொலும் பொது உளற ஆரம்பித்து
காதலிக்கிறேன் என்று சொல்லி முடிக்கும்போது
கன நேரம் இருண்டு போனது

உனது பதில் என்ன என்று நான் கேட்ட
கேள்விக்கு புன்னகை ஒன்றை
பரிசாய் தந்து விட்டு பார்க்கலாம் நாளை
என்றாய் ....................................................
அந்த நாளை என்ற நாளை மட்டும்
பார்க்க நான் கடந்த யூகங்கள்
நான் நடத்திய யூதங்கள்
தோழி உனக்கு தெ ரி யுமா ..............
இன்னும் காதல் சொல்வேன் ..............

அன்புடன் உன்
பால்கி (balakrishnan)

Wednesday, November 18, 2009

காதல் சொன்ன நேரம்


மார்கழி குளிர் நாள் மாலைநேரம்
மஞ்சள் தங்கமாய் வெயில் காயும்
பட்சிகள் எல்லாம் கூடு சேரும்
பார்வையில் மட்டும் எடை கூடும்

மஞ்சள் நிற தேவதையை காணவேண்டி
மதில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றேன்
கொஞ்சும் கொலுசு ஒலிசப்தம் கேட்க்க
குளிரிலும் எந்தன் தேகம் வேர்க்க

நெஞ்சு கூட்டுக்குள் தீபிடிக்க
நின்றேன் நானும் உயிர் துடிக்க
நெருங்கி நீ வந்து நின்ற நேரம்
இரும்பு பந்தாய் என் உள்ளம் மாறும்

கனவில் உன்னை பார்க்கும்போது
காதல் பல சொல்லுகின்றேன்

இன்னும்சொல்வேன்


காதலுடன்
பால்கி (பாலகிருஷ்ணன்)

Monday, November 16, 2009

கனவுகளின் களம்


காதல் என்பது கனவுகளின் களம்
அதில் தப்பி செல்ல எனக்கு இல்லை பலம்
தேர்ந்த நடிகனை போல் இமை நடிக்கும்
திறந்து இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கும்
திறந்தா விழி முன் ஒரு திரை விரியும்
திங்கள் போல் உந்தன் விழி தெரியும்

பூ , புற , புல்வெளி ,பனித்துளி, மட்டுமல்ல
பொசுக்கும் வெயில் , பொல்லா மாலை
எல்லாவற்றிலும் உன் முகம்
கொல்லாமல் கொல்லுதடி
நில்லாமல் என் நினைவு
உன் பின்னாலே செல்லுதடி

தூக்கமே இல்லையடி
இதயம் துடிப்பதும் இல்லையடி
உன் நினைவை குடிப்பது ஒன்றுமட்டும்
என் வேலையாய் ஆனதடி

படித்ததும் மறந்ததடி
பார்வையில் பழுது ஒன்றும் இல்லையடி
நினைத்தது ஒன்று இருக்க
செய்யும் செயல் வேறு ஆனதடி

கனவுகள் மட்டும் வாழ்வதனால்
காதலை எனக்கு பிடிகின்றது
கண்மணி உனக்கும் இதுபோல
கனவுகள் உண்ட சொல்வாயா
காதலுடன்
பால்கி(balakrishnan)

Tuesday, November 3, 2009

கொஞ்சம் காதல் பேசுவோம் தோழி


என்று நாம் சந்தித்தோம் ?

எங்கு நாம் சந்தித்தோம் ?

என்று உனக்கு நினைவு உள்ளதா

அன்று நீ அணிந்து இருந்த கைவளை

நிறம் கூட எனக்கு நினைவில் உள்ளது


உன் கண்களை பார்க்க கூட எனக்கு துணிவு இல்லை

ஆகவே உன் கைகளை பார்த்தேன்

முதலில் பேசிய போது என் எல்லாகேள்விக்கும்

மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாய்


ஆனால் உன் மௌன ஆயுதத்தின் முன்

என் எல்லா படைகளும் செயல் அற்று போனது

உன் நாணவிழிகளின் முன் நான் ஒரு அடிமை போல்

செயல் அற்று விழுந்தேன்


உன் பேச்சின் மென்மை என்னை

பலமாய் தாக்கி காயபடுதியது

ரணம் வலிக்கும் -ஆனால் உன்னால் பட்ட ரணம்

எனக்கு இனித்தது என்று உனக்கு தெரியாது


முதன் முதலாய் உன் விரல் தொட்ட சமயம்

முழுதாய் ஒரு பூகம்பம் என் இதயத்தில் உணர்ந்தேன்

பல நூறு வார்த்தை கொண்டு ஒரு

கவிதை மலை தொடுப்பேன்


உன்னிடம் கொடுக்க ஓடி நான் வருவேன்

என் செய்ய உன் விழி என்னும்

ஏவுகனை பட்டவுடன் கவிதை

வரியாய் ........

வார்த்தையாய்...........

எழுத்தாய் .............

கோடாய்..............

புள்ளியாய்..........மாறி

மறைந்து போகின்றதுஉனக்கும் இது போல் இருந்தா?

சொல்வாயா ?

நீ எனக்கு .................


இன்னும்காதல் பேசலாம் .......


காதலுடன் அன்பு

பால்கி (BALAKRISHNAN)

Saturday, October 31, 2009

தோஷங்களை போக்கும் "பிரதோஷம்"

தோஷங்களை போக்கும் "பிரதோஷம்"

ஆன்மீகம், கட்டுரை
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டதும் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
திருமால், பிரம்மன், தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அன்னை பார்வதி சிவபெருமானின் கழுத்தில் தன் கைகளால் தடவிய போது கொடிய விஷம் அமுதாக மாறியது. சிவபெருமான் "திருநீல கண்டர்' ஆனார்.
"சனி பிரதோஷம்"

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

"பிரதோஷ காலம்"

பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.

"பிரதோஷ தரிசனம்"

வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.

"பிரதோஷ வகைகள்"

பிரதோஷமானது நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.

நித்ய பிரதோஷம்: தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கு கீழ்க்கண்ட பொருட்களை கொடுத்தால் விளையும் பலன்கள் வருமாறு:

1. பால் கொடுத்தால் நோய் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் தந்தால் பல வளமும் உண்டாகும்.
3. தேன் கொடுத்தால் இனிமையான சாரீரம் கிட்டும்.
4. பழங்கள் கொடுத்தால் விளைச்சல் பெருகும்.
5. பஞ்சாமிர்தம் தந்தால் செல்வச்செழிப்பு ஏற்படும்.
6. நெய் கொடுத்தால் முக்திப்பேறு கிட்டும்.
7. இளநீர் தந்தால் நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.
8. சர்க்கரை கொடுத்தால் எதிர்ப்புகள் மறையும்.
9. எண்ணெய் தந்தால் சுகவாழ்வு கிட்டும்.
10. சந்தனம் கொடுத்தால் சிறப்பான சக்திகள் பெறலாம்.
11.மலர்கள் தந்தால் தெய்வ தரிசனம் கிடைக்கும்.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் பிறவி எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே, பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறுவோம்.

சிவமயம்

என்றும் அன்புடன்
பால்கி (BALAKRISHNAN)

Thursday, October 29, 2009

கடவுள் எங்கே இருக்கின்றார்
எங்கு தேடுகிறாய் என்னை?


நான் உன்னோடு தான் இருக்கிறேன்.


யாத்திரைகளில் அல்ல,


உருவங்களிலும் அல்ல,


தனிமையில் அல்ல,


ஆலயங்களில் அல்ல,


மசூதிகளில் அல்ல,


காபாவிலும் கைலாயத்திலும்


அல்ல,நான் உன்னோடு இருக்கிறேன் மானிடா,


உன்னோடு தான் இருக்கிறேன்.


பிரார்த்தனைகளில் அல்ல,


தவத்தினிலும் அல்ல,


விரதத்தில் அல்ல,


துறவிலும் அல்ல,


இயக்கச் சக்திகளில் அல்ல,


உன் உடலிலும் அல்ல,


அகண்ட வெளியில் அல்ல,


இயற்கையின் கருவிலும் காற்றின் மூச்சிலும் அல்ல,


கவனத்துடன் தேடிப் பார்,


கண நேரத்தில் கண்டு கொள்வாய் என்னை.


சொல்கிறான் கபீர், கவனமாய்க் கேள்,


உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ,


அங்கெல்லாம் நானிருக்கிறேன்.

என்றும் நம்பிகையுடன் உங்கள்
பால்கி (BALAKRISHNAN)

Tuesday, October 20, 2009

முடிந்த உதவியைச் செய்யுங்கள்  1. முடிந்த உதவியைச் செய்யுங்கள்
    அக்டோபர் 19,2009,15:35 IST
    * இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது.
    * மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.* யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.* ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள். * மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும். -விவேகானந்தர்

என்றும் உங்கள் அன்பான
பால்கி

நிலவு


வானில் ஒரு நிலவு காணும் பொது வரும் ஒரு கனவு

பாலர் பருவத்திலே பாட்டி இருந்த நிலவு

பள்ளி பருவத்திலே படம் சொன்ன நிலவு

காளை பருவத்திலே காதல்தந்த நிலவு

காலம் எலாம் உன்னோடு எனக்கு உண்டு உறவு


நான் சிரித்தால் சிரிப்பாய்

அழுதால் அழுவாய்

வளர்வாய் தேய்வாய்

வாடாமல் சிரித்துஇருப்பாய்


Thursday, August 20, 2009

நடப்புக்கு ஒரு வணக்கம்

அணிய நல்ல சட்டை இல்லை
அனா காசும் கையில் இல்லை
தலையில் எண்ணெய் இல்லை
தாங்காத வறுமை தொல்லை

ஊர் என்னைஒதுக்கியது
ஓடவிட்டு விரட்டியது
சுற்றம் எல்லாம் என்னை
சுற்றி நின்று ஏளனம் செய்தது

சூனியமாய் வாழ்கை தெரிய
சுடும் தீயாய்உறவு எரிய
செத்துவிட முடிவுஎடுத்து
சென்றேன் கடைவீதி

சாகும் போதும் சுகம் தேடும்
சாமானிய மனிதன் தான் நான்
வலியே இல்லாமல் சாக
வாங்கினேன் தூக்க மருந்து

துக்கம் நெஞ்சு அடைக்க
கண்ணீர் விழி மூட
எடுத்தேன் மருந்தை
என் வாழ்வின் கடைசி விருந்தை

கண்கள் மயங்க கட்சிகள் மறைய
கடைசியாய் ஒரு உருவம் கலங்கலாய்
கண் விழித்து பார்க்கிறேன்
நிற்கின்றன் என் நண்பன்

பத்து நாள் சிகிச்சை
உடலுக்கும் மனதுக்கும்
பயம் தெளியவைத்து
பார்வையை விரியவைத்து

இன்று நான் மனிதனாய்
நிற்கின்றேன் தெளிவாய்
எனக்கு தீர்ந்தது பிணக்கம்
அந்த நடப்புக்கு ஒரு வணக்கம்!

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)Wednesday, August 19, 2009

கண்ணீர் எதற்கு ?


உன் துக்கத்தில் பங்கெடுக்க ஒருவரும் இல்லயா

உன் கண்ணீர் துடைக்க ஒரு விரல் இல்லயா

உன் சோகத்தை சுமக்க ஓர் தோள் இல்லயா

நீ ஓய்ந்து விழும்போது பிடிக்க ஒரு பற்று மரம் இல்லயா

நீ தத்தளிக்கும் போது எட்டிபிடிக்க ஒரு பட்ட மரம் இல்லயா


பாவி நீ என்ன வாழ்ந்தாய் !

பயனில்லா பண்டம் போல

மற்றோர் துக்கத்தில் பங்கெடுக்க நினைத்து உண்டா ?

மற்றோர் கண்ணீர் துடைக்க மனதினில் எண்ணம் உண்டா ?

மற்றோர் சோகத்தை சுமக்க மனம்உண்டா ?

பிறர் ஓய்ந்து விழும்போது ஓடி பிடித்தது உண்டா ?

உன் பதில் "இல்லை" என்றால்


எப்படி நீ அழுவாய்


ஏர் பிடிக்க வரமாட்டாய்

விதைபோடவரமாட்டாய்

நீர் கட்ட வரமாட்டாய்

கதிர் அறுக்க வரமாட்டாய்

பொதி சுமக்க வரமாட்டாய்

ஆனால் .....................................


விளைச்சலில் பங்கு இல்லை என்றால்

வீரிட்டு அழுகின்றாய்

என்ன இது தருமம்


விதைத்தது தான் பலன் தரும்

இன்னும் காலம் இருக்கின்றது

இன்றே அன்பை விதை

வருகின்ற காலம் உனக்கு

வளமான பலனை தரும் ..............


என்றும் அன்புடன்

baalki (பாலகிருஷ்ணன்)

வாழ்வில் வெற்றி எங்கே கிடைக்கும்

வாழ்வில் வெற்றி எங்கே கிடைக்கும் ?
விலை என்ன ?
விற்பவர் யார் ?
எண்ணிக்கையா ?
எடையா ?
படி கணக்கா ?
மொத்தமா ?
சில்லறையா ?
முழு தொகையா ?
தவணை முறையா ?
புரியவில்லை என்று
பல நாளாய் தேடி பலன் ஒன்றும் இல்லை
புத்தன்சயனித்த போதி மரத்தடி
சித்தம் தெளிய சிறிது நேரம் கண் அயர
பொறிகள் கலங்க பொட் என்று ஓர் அடி
பின் மண்டையில் விழுந்தது
பட்ட அடி உணர
பய பந்து நெஞ்சு உருள
சட் என்று விழித்தேன் - எதிரில் புத்தன் அவன்
சம்மணமிட்டு அமர்ந்து சந்தமாய் சிரிகின்றான்
கேள்வி கணைகளை மாலையாய் தொடுத்து
கொடுத்தேன் புத்தனிடம்-
கிழித்து அதை குப்பையில் எரிந்துவிட்டன்
ஏன் என்றேன் -நீ என்றான்
புரியாமல் தயங்கி நின்றேன்
புத்தனே பகறலாணன்
"உனக்குள்ளே உண்டு அது
ஊருக்குள் தேட வேண்டாம்
கையிலே வெண்ணை வைத்து
காடு எங்கும் நெய் தேடும்
மூடனை போல நீ வெளியில் தேடுகின்றாய்
வெற்றியின் ரகசியத்தை ...............

Sunday, August 2, 2009

அவனுக்காய் ஒரு பிராத்தனை

அவனுக்காய் ஒரு பிராத்தனை

கணப்பொழுது உன் கண்களை மூடி -கடந்த
காலத்தை சிந்தனையில் நிறுத்து
உன் வாழ்கை பாதை
உன் உழைப்பு
உன் உயர்வு
உன்செல்வம்
உன் தோல்வி
உன் வெற்றி
உன் கண்ணீர் என
உன் அத்தனைநிகழ்வுகளிலும்
உன்னுடன் உனக்காய் உனதாய் இருந்த
ஒரு உறவு எது என்று யோசித்து பார்
ஏதேனும் ஒரு நண்பன் இருப்பான்
அவனுக்காய் ஒரு பிராத்தனைஇன்றேனும் செய்
அந்த நண்பன் நான் என்றால்
என் பாசத்தின் கண்ணீர்
பரிசாய் உனக்கு இல்லை
என்றாலும் நான் தவம் இருப்பேன் அதற்கு

என்றும் அன்புடன் உங்கள்

பால்கி (பாலகிருஷ்ணன்)

Tuesday, July 28, 2009

காதல் என்றால் என்ன ?-2


பதில் கண்ணதாசன்


தமிழர் மனதில் தனிஇடம் பிடித்த தன்னிகரல்லா கலைஞன். தரணியெல்லாம் போற்றும் தனித்துவமான கவிஞன். கண்ணதாசன்

அவரின் மொழி காதலின் அரிசுவடி அதயும் பார்ப்போம்


அவள் இல்லா வாழ்க்கை எப்படி அவனுக்கு இருக்கும்

மிக அழகாக அந்த காதலின் கடவுள் சொல்வதாய் ஒரு பாடல்

""உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலின்


""பேருக்கு பிள்ளையுண்டு -

பேசும்பேச்சுக்கு சொந்தம்

உண்டு -

என்தேவையை யாரறிவார்?

உன்னைப்போல்தெய்வம் ஒன்றே அறியும்!'............


இது அவனுக்கு . அப்படியென்றால் அவளுக்கு ?


"கண்பட்டதால் உந்தன் மேனியிலேபுண்பட்டதோ அதை நானறியேன்புண்பட்ட சேதியை கேட்டவுடன் -

இந்தபெண்பட்ட பாட்டை யாரறிவார்?

என்று துடிக்க செய்வது காதல் என்று காதலுக்கு ஒரு

அருமையான விளக்கம் தருகிறார்

அப்படி இருந்தவர்கள் காலத்தின் கட்டாயத்தில் பிரிந்துவிட்டால்

ஒருவர் மற்றவரை உன்னைச் சொல்லி குற்றமில்லைஎன்னைச் சொல்லி குற்றமில்லை'எங்கிருந்தாலும் வாழ்க

- உன்இதயம் அமைதியில் வாழ்க'' என்று வாழ்த்தும் மனம்

அதுதான் உன்ன்மை காதல் என்று கூறுகின்றார்

என்றும் அன்புடன்

baalki (பாலகிருஷ்ணன்)

Monday, July 27, 2009

காதல் என்றால் என்ன ?
காதல் என்றால் என்ன ?


இந்த கேள்வி பிறந்து எத்தனை காலம் ஆனது என்று எஅருக்கும் தெரியாது.


ஆனால் பதில் ?????
நமக்கு தான் தெரியவில்லை வாழ்ந்து முடித்த மூத்தோர்களை கேட்கலாமா


புரட்சியாளர் PAGUTHARIVU PAGALAVAN பெரியார்


ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்

தொலைநோக்குப் பார்வை தேவை!

காதலித்துப் பார்!-உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்
உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி
இந்த பூக்கள்எல்லாம்காதலை
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும்
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

வைரமுத்துவின் கவிதை தாலாட்டு உங்களுக்காக வழங்கியது

பால்கி (balakrishnan)

Thursday, July 23, 2009

கள்ளிகாட்டு இதிகாசம் -கவிபேரரசு வைரமுத்துநல்ல விசியம் எங்கே இருந்தாலும் தேடி படிப்பது என்பது எனக்கு பிடிக்கும் அதுபோல் கவிபேரரசு வைரமுத்து அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய இந்த கள்ளிகாட்டு இதிகாசம் என்னை மெய்மறக்க செய்தது கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது!!இதில் ஒரு மேம்பட்ட அந்த கரிசல் மக்களின் வாழ்கை பதிவை பார்க்கலாம் இது!!பகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் இந்த கதையின் அல்ல காவியத்தின் நாயகன் கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மாமனிதன். வாழ்கையின் நிமிர நினைக்கும்போது வந்து அழுத்துகின்ற மலைஅளவு கவலை, சோகம், அதனால் எற்படும் வலி அதனையும் மீறி வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் சோக வரலாறே "கள்ளிகாட்டு இதிகாசம்".".மண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது. அதுமட்டும் அல்ல அந்த கரிசல் மக்களின் வாழ்கையை ஒரு திரைப்படம் போல் பதிவு செய்யும் யூக்தியும் ,கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ள அழகும் நமை ஒருங்கே கட்டிபோடுகின்றனா கிராமத்து வாழ்கையின் சுவாரசியம் இந்த கதையில் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது .பேயதேவரின் இளமை காலம் அவரின் காதல மனைவி அவரின் உழைப்பு தனியாளாய் தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் உழைப்பும் கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும் நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது.பேயதேவரின் மகனின் பாத்திர படைப்பு கிராமத்தில் சண்டியரர்கதிரியும் ஒரு கரடு முரடுஆன வாலிபனின் மொத்த பரிமனாங்களையும் இம்மி பிசகாது பரிமளிக்கிறது . கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செயபவை
காவியத்தின் முடிவு : சிக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து அவரை தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை காலிசெய்ய அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதில் மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க, படாத பாடுபட்டு இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார். அந்த கவிய தலைவனின் வாழ்கை அத்துடேன் முடிகிறது நாவலை படித்து முடிக்கும் போது நம் மீது கரிசல் மண்வாசம் உணரமுடிவது வைரமுத்துவின் மாயஜாலம்

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி(balakrishnan)

Monday, July 13, 2009

இது வாலி -ன்காதல் கடிதம்

எல்லோரும் காதல கடிதம் எழுதலாம் ஆனால் கவிஞ்ஞர்களின் காதல என்பது ரொம்பவும் வித்தியாசமானது எப்படி என்று பார்ப்போமா
இது வாலி -ன் காதல்

"நான் அனுப்புவது கடிதம் அல்ல (வேறு என்னவாம் )
உள்ளம் (ஒ)
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல (பின்ன)
எண்ணம் (அப்டியா எதுக்கு )
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள


எல்லோரும் காதலுக்கு கடிதம் அனுப்பினால்-இவர்
காதலுக்கு உள்ளதையே அனுப்புகிறார் அதுமட்டுமா
அதில் உள்ளதுஎல்லாம் எழுத்தும் அல்லவாம்
அவரது எண்ணங்களை அதில் பதிப்பித்து
ஒரு குறுந்தகடு போல் அனுப்பி உள்ளாராம் இது மட்டுமா
இவையெல்லாம் எதற்கு என்றால்
உன் உள்ளதை கொள்ளை அடிக்கவாம்
இந்த வார்த்தை விளையாட்டில் மயங்காமல் ஒரு பெண் இருக்க இயலுமா

அதோடு விட்டாரா இன்னும் எழுதுகிறார்
அந்த கடிதம் யார் யாருக்கு எழுதுவது
இதோ பதில்
"நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம் "

எழுதி முடித்து பின்குறிப்பு எழுதுகின்றார்

"எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள "

சொல்லவேண்டியதை மீண்டும் மீண்டும்
சொல்லி பதியவைக்கிறார் அது மட்டுமா
உண்மை காதலின் உணர்வுகளை ஒரு காதலனின்
நிலையில் இருந்து சொல்லுவது ஒரு கலை
அந்த கலை இவருக்கு எப்படி பிடிபட்டது
ஓ................இவன் வாலிப கவிஞன்அல்லவா

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்இன்னும் காதால் படிப்போம்


என்றும் அன்புடன்

உங்கள்

பால்கி(பாலகிருஷ்ணன்)

Wednesday, July 8, 2009

வாழ்கை பற்றி கண்ணதாசன்

அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாமுதலில் நமக்கெல்லாம் தொட்டிலடாகண் மூடினால் காலில்லா கட்டிலடாபிறந்தோம் என்பதே முகவுரையாம்பேசினோம் என்பதே தாய்மொழியாம்மறந்தோம் என்பதே நித்திரையாம்மரணம் என்பதே முடிவுரையாம்ஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாசிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்தீமைகள் செய்பவன் அழுகின்றான்இருப்போம் என்றே நினைப்பவர் கண்களைஇறந்தவன் அல்லவோ திறக்கின்றான்ஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாவகுப்பார் அதுபோல் வாழ்வதில்லைவந்தவர் யாருமே நிலைத்ததில்லைதொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லைதொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடா---------------

ஆடுபவரை பார்த்தால் இப்படி எல்லாம் பாடிவைத்த கண்ணதாசன் வார்த்தையை நினைக்க தோன்றுகிறது ............................................
இது தான் வாழ்கை ..................................................................................

என்றும் அன்புடன்

பால்கி (பாலகிருஷ்ணன்)

வாழ்கையை பற்றி கண்ணதாசன்

கண்ணதாசன் கவிதை
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்!படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்படித்துப் பாரென இறைவன் பணித்தான்!அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்!அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்மணந்து பாரென இறைவன் பணித்தான்!பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்!இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்!'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
இது தான் வாழ்க்கை எனவே வாழ்கையை வாழ்ந்து அனுபவித்து வெற்றிகொளுங்கள்

என்றும் அன்புடன்
உங்கள் பால்கி (பாலகிருஷ்ணன்)

Tuesday, June 23, 2009

பால்கிஇன் குட்டி கவிதைகள்

வீரிட்டு அழுதும் வேண்டாம் என சொல்லியும்
விட்டு விட்டு வருகிறாள் அன்னை
பாலர் பள்ளியில் என்னை

அடித்து குத்தி உருட்டி புரட்டி
அரைமணி நேரம் கழித்து சொன்னாள்
சப்பாத்தி மாவு சரியான பதம் என்று

சாவு நாள் தெரிந்தும் பின்னும்
சந்தோசம்மாக உள்ளதே
பட்டாம்பூச்சி

வைரஸ் தாக்கி மரித்த பின்னும்
மீண்டும் உயிர்த்து
கணணி (computor)

சினிங்கி கொண்டே கூடவே வந்தாலும்
சிறிதும் கோபம் வரவில்லை
கைபேசி (mobile phone)

Saturday, June 20, 2009

காதலின் சுவை என்ன ?

காதல் என்பது என்ன சுவை
காதல் என்பது சுவயானது என்று ஒரு நண்பன் சொன்னான் !
எனக்கு அது தெரியது தேட போனேன்
இதோ வருகின்றான் இவனிடம் கேட்போம்

காதலின் சுவை என்ன நண்பா ?
கசப்பு !
ஏன் அப்படி சொல்லுகிறாய்?
பிரிவும் துயரும் தருகிறதே !அதுதான் என்றன் ?
பாவம் அவனுக்கு காதல் தோல்வியாம்
போகட்டும் விடு அவனுக்கு அப்படி

இன்பமாய் வரும் இவனிடம் கேட்போம்
காதலின் சுவை என்ன நண்பா ?
இனிப்பு !!
ஏன் அப்படி சொல்லுகிறாய்?

காதலில் களிப்பு உண்டு ,
கவிதை உண்டு கற்பனை உண்டு ,
கனவு உண்டு அதுதான் என்றன்
மீசைமுழிக்கும் பருவம்
இவன் முதல் காதல் இதுதானாம்
இவனுக்கு காதல் இப்படி !

வானை முறைத்தபடி
வரும் இவனிடம் கேட்போம்
காதலின் சுவை என்ன நண்பா ?
காரம்!!!
ஏன் அப்படி சொல்லுகிறாய்?
கண்களை கலங்க வைக்கும,
சுவாசத்தில் தீ பிடிக்கும்
எரிச்சல் கொடுக்குமட காதல்
இவன் காதல் மறுக்கப்பட்டதாம்
அதுதான் இந்த கோபம்

தெருவில் நின்று திசை பார்க்கும் நண்பா நீ சொல்
காதலின் சுவை என்ன ?
புளிப்பு !.!.!!
என்ன புளிப்பா ?
ஆம் எட்டி எட்டி பார்த்தும்
கிட்டவில்லையென்றால்
ச்சீ சீ அது புளிப்பு தான்
சொல்லிவிட்டு சென்றுவிட்டான்

அதோ பார் வாழ்கையை வாழ்ந்து விட்ட முதுமனிதன்
அவனிடம் கேட்போம் காதலின் சுவை என்னவென்று?ஐயா சொலுங்கள் என்ன சுவை காதல் என்று ?
உவர்ப்பு !..!..!..!!
இது இல்லைஎன்றால் வாழ்வில் ஒன்றும் இல்லை
இது குறைந்து போனால் வாழ்வில் சுவை இல்லை
இது கூடிபோனால் இதுபோல் கசப்பும் இல்லை
அளவான காதல் போல் இன்பம் இல்லை
அனுபவ சுருக்கங்கள் அவர்முகத்தில் கையெழுத்தாய்
அவர் சொன்ன சொல் அத்தனையும் மெய் எழுத்தாய்
நம்பலாம் என்று நான் நினைத்த நேரம்

நேராக வந்தார் ஓர் துறவி
துணிந்தே சொன்னார் காதல் சுவை ??????..........
துவர்ப்பு என்று
எப்படி என்று நான் கேட்பதுற்குள்
செப்படி வித்தை போல் மறைந்தே போனார் ........
எதுதான் உண்மை என்று புரியவில்லை .......
எவரிடம் கேட்பது என்று தெரியவில்லை

அன்புடன்
பால்கி (பாலகிருஷ்ணன்)

Friday, June 19, 2009

என்னை பற்றி நான் பால்கி

கவிதை விற்ற காசுக்கு கடலை
வாங்கிகடை தெருவில் தின்று விட்டு
காகித்தில் கை துடைக்கும் காவிய கவிஞ்சன் நான்
உண்மையோ பொய்யோ உணர்வதை எழுதிவிட்டு
ஓடி விட நினைகின்றேன்
நலதொரு கவிதை என்று நாலு பேர் சொல்ல
நாயும் இதைவிட நல்லதாய் எழுதும் என்று
ஒரு நூறு பேர் சொல்ல
வார்த்தைகள் வரும் முன் வானவில்லாய் மறைகின்றேன்
மீண்டும் வருகிறேன் .........
மேகம் மறைத்த சூரியனாய்
கவிதை தொடரும் ...............................

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)

கருத்துகளை வரவேறகின்றேன்

Wednesday, June 17, 2009

எல்லாம் நலம்


எல்லாம் நலமா வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவா
அருள்வாய்