Thursday, July 23, 2009

கள்ளிகாட்டு இதிகாசம் -கவிபேரரசு வைரமுத்து



நல்ல விசியம் எங்கே இருந்தாலும் தேடி படிப்பது என்பது எனக்கு பிடிக்கும் அதுபோல் கவிபேரரசு வைரமுத்து அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய இந்த கள்ளிகாட்டு இதிகாசம் என்னை மெய்மறக்க செய்தது கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது!!இதில் ஒரு மேம்பட்ட அந்த கரிசல் மக்களின் வாழ்கை பதிவை பார்க்கலாம் இது!!பகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் இந்த கதையின் அல்ல காவியத்தின் நாயகன் கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மாமனிதன். வாழ்கையின் நிமிர நினைக்கும்போது வந்து அழுத்துகின்ற மலைஅளவு கவலை, சோகம், அதனால் எற்படும் வலி அதனையும் மீறி வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் சோக வரலாறே "கள்ளிகாட்டு இதிகாசம்".".மண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது. அதுமட்டும் அல்ல அந்த கரிசல் மக்களின் வாழ்கையை ஒரு திரைப்படம் போல் பதிவு செய்யும் யூக்தியும் ,கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ள அழகும் நமை ஒருங்கே கட்டிபோடுகின்றனா கிராமத்து வாழ்கையின் சுவாரசியம் இந்த கதையில் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது .பேயதேவரின் இளமை காலம் அவரின் காதல மனைவி அவரின் உழைப்பு தனியாளாய் தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் உழைப்பும் கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும் நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது.பேயதேவரின் மகனின் பாத்திர படைப்பு கிராமத்தில் சண்டியரர்கதிரியும் ஒரு கரடு முரடுஆன வாலிபனின் மொத்த பரிமனாங்களையும் இம்மி பிசகாது பரிமளிக்கிறது . கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செயபவை
காவியத்தின் முடிவு : சிக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து அவரை தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை காலிசெய்ய அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதில் மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க, படாத பாடுபட்டு இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார். அந்த கவிய தலைவனின் வாழ்கை அத்துடேன் முடிகிறது நாவலை படித்து முடிக்கும் போது நம் மீது கரிசல் மண்வாசம் உணரமுடிவது வைரமுத்துவின் மாயஜாலம்

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி(balakrishnan)

5 comments:

  1. nalathu arumai baalki thodurungal

    ReplyDelete
  2. innum paduvugalai edirparkerean................
    yendrum anbuden dhanam

    ReplyDelete
  3. நல்ல விசியம் எங்கே இருந்தாலும் தேடி படிப்பது என்பது எனக்கு பிடிக்கும்

    by nanjundan kothagiri

    ReplyDelete