Saturday, November 19, 2011

மீண்டும் நான் மீண்டு வருகிறேன்



தீ யின் சாம்பலில் அனலின் சூட்டில்
அழிந்தது
காடு என்று எண்ணியவர் வருந்தவும்
எங்கே என் நண்பன் இனி மீண்டும் வருவனா?
என்று ஏங்கி இருந்தவர்கள் மகிழவும்
சாம்பலில் குவியலில் ஒரு புழுதி எழுந்தது
புயல் போலவந்த புகை முட்டத்தின் நடுவில் இருந்து
மீண்டும்வந்தது ஒரு பறவை
மீண்டு
வந்தது ஒரு பறவை
அதை போல் நானும் என்னை எரித்த கவலைகளை யும் ,
சோகம்
என்னும் சம்பலையும் கடந்து வந்துவிடேன்
நண்பர்களே
காலம் இனி வெல்லும்


என்றும் அன்புடன் பால்கி (பாலகிருஷ்ணன்)



Saturday, July 9, 2011

kanavugal

kanavugal

Friday, February 18, 2011

நண்பர்களே நான் உங்கள் பால்கி
சுமார் ஒரு ஆண்டுகாலம் உன்கிளிடம் தொடர்பில் இருக்க முடிய வில்லை
இப்போது மீண்டும் புது பொலிவுடன் திரும்பி வருகின்றேன்

என் முதல் கவிதை மீண்டும் உங்களுக்காக
கவிதை விற்ற காசுக்கு கடலை
வாங்கிகடை தெருவில் தின்று விட்டு
காகித்தில் கை துடைக்கும் காவிய கவிஞ்சன் நான்
உண்மையோ பொய்யோ உணர்வதை எழுதிவிட்டு
ஓடி விட நினைகின்றேன்
நலதொரு கவிதை என்று நாலு பேர் சொல்ல
நாயும் இதைவிட நல்லதாய் எழுதும் என்று
ஒரு நூறு பேர் சொல்ல
வார்த்தைகள் வரும் முன் வானவில்லாய் மறைகின்றேன்
மீண்டும் வருகிறேன் .........
மேகம் மறைத்த சூரியனாய்
கவிதை தொடரும் ...............................

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)

என்றும் அன்புடன்
உங்கள் பால்கி (பாலகிருஷ்ணன்)

Friday, December 11, 2009

காதல் சொன்ன நேரம் 2

கனவில் சொன்ன காதலில் தைரியம்
நேரில் இல்லையடி
உன் கண்ணை பார்க்கும் துணிச்சல் மட்டும்
எனக்கு இல்லையேடி
தயங்கி நிற்கின்ரேன் தவியாய் தவிக்கிரேன்
சொல்லுங்கள் என்று நீ
சொன்ன வார்த்தை மட்டும் சுவையாய், சுகமாய்
கேட் கிறது
ஆணுக்கு வீரம் உண்டு என்று எந்த மடையன்
சொன்னது என் மனசாச்சி என்னை கேலி செய்கிறது
நூறு கிலோ மீட்டர்வேகம் செல்லும் பேருந்தில்
ஓடி சென்று ஏறும் பொது வாராத பயம்
உண்கண்களை பார்த்து காதால் சொல்ல
ஏங்கும் போது வந்ததுஎன்ன
நா ன் என்று சொலும் பொது நடுங்கிய வார்த்தை
உன்னை என்று சொலும் பொது உளற ஆரம்பித்து
காதலிக்கிறேன் என்று சொல்லி முடிக்கும்போது
கன நேரம் இருண்டு போனது

உனது பதில் என்ன என்று நான் கேட்ட
கேள்விக்கு புன்னகை ஒன்றை
பரிசாய் தந்து விட்டு பார்க்கலாம் நாளை
என்றாய் ....................................................
அந்த நாளை என்ற நாளை மட்டும்
பார்க்க நான் கடந்த யூகங்கள்
நான் நடத்திய யூதங்கள்
தோழி உனக்கு தெ ரி யுமா ..............
இன்னும் காதல் சொல்வேன் ..............

அன்புடன் உன்
பால்கி (balakrishnan)

Wednesday, November 18, 2009

காதல் சொன்ன நேரம்


மார்கழி குளிர் நாள் மாலைநேரம்
மஞ்சள் தங்கமாய் வெயில் காயும்
பட்சிகள் எல்லாம் கூடு சேரும்
பார்வையில் மட்டும் எடை கூடும்

மஞ்சள் நிற தேவதையை காணவேண்டி
மதில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றேன்
கொஞ்சும் கொலுசு ஒலிசப்தம் கேட்க்க
குளிரிலும் எந்தன் தேகம் வேர்க்க

நெஞ்சு கூட்டுக்குள் தீபிடிக்க
நின்றேன் நானும் உயிர் துடிக்க
நெருங்கி நீ வந்து நின்ற நேரம்
இரும்பு பந்தாய் என் உள்ளம் மாறும்

கனவில் உன்னை பார்க்கும்போது
காதல் பல சொல்லுகின்றேன்

இன்னும்சொல்வேன்


காதலுடன்
பால்கி (பாலகிருஷ்ணன்)

Monday, November 16, 2009

கனவுகளின் களம்


காதல் என்பது கனவுகளின் களம்
அதில் தப்பி செல்ல எனக்கு இல்லை பலம்
தேர்ந்த நடிகனை போல் இமை நடிக்கும்
திறந்து இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கும்
திறந்தா விழி முன் ஒரு திரை விரியும்
திங்கள் போல் உந்தன் விழி தெரியும்

பூ , புற , புல்வெளி ,பனித்துளி, மட்டுமல்ல
பொசுக்கும் வெயில் , பொல்லா மாலை
எல்லாவற்றிலும் உன் முகம்
கொல்லாமல் கொல்லுதடி
நில்லாமல் என் நினைவு
உன் பின்னாலே செல்லுதடி

தூக்கமே இல்லையடி
இதயம் துடிப்பதும் இல்லையடி
உன் நினைவை குடிப்பது ஒன்றுமட்டும்
என் வேலையாய் ஆனதடி

படித்ததும் மறந்ததடி
பார்வையில் பழுது ஒன்றும் இல்லையடி
நினைத்தது ஒன்று இருக்க
செய்யும் செயல் வேறு ஆனதடி

கனவுகள் மட்டும் வாழ்வதனால்
காதலை எனக்கு பிடிகின்றது
கண்மணி உனக்கும் இதுபோல
கனவுகள் உண்ட சொல்வாயா
காதலுடன்
பால்கி(balakrishnan)

Tuesday, November 3, 2009

கொஞ்சம் காதல் பேசுவோம் தோழி


என்று நாம் சந்தித்தோம் ?

எங்கு நாம் சந்தித்தோம் ?

என்று உனக்கு நினைவு உள்ளதா

அன்று நீ அணிந்து இருந்த கைவளை

நிறம் கூட எனக்கு நினைவில் உள்ளது


உன் கண்களை பார்க்க கூட எனக்கு துணிவு இல்லை

ஆகவே உன் கைகளை பார்த்தேன்

முதலில் பேசிய போது என் எல்லாகேள்விக்கும்

மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாய்


ஆனால் உன் மௌன ஆயுதத்தின் முன்

என் எல்லா படைகளும் செயல் அற்று போனது

உன் நாணவிழிகளின் முன் நான் ஒரு அடிமை போல்

செயல் அற்று விழுந்தேன்


உன் பேச்சின் மென்மை என்னை

பலமாய் தாக்கி காயபடுதியது

ரணம் வலிக்கும் -ஆனால் உன்னால் பட்ட ரணம்

எனக்கு இனித்தது என்று உனக்கு தெரியாது


முதன் முதலாய் உன் விரல் தொட்ட சமயம்

முழுதாய் ஒரு பூகம்பம் என் இதயத்தில் உணர்ந்தேன்

பல நூறு வார்த்தை கொண்டு ஒரு

கவிதை மலை தொடுப்பேன்


உன்னிடம் கொடுக்க ஓடி நான் வருவேன்

என் செய்ய உன் விழி என்னும்

ஏவுகனை பட்டவுடன் கவிதை

வரியாய் ........

வார்த்தையாய்...........

எழுத்தாய் .............

கோடாய்..............

புள்ளியாய்..........மாறி

மறைந்து போகின்றது



உனக்கும் இது போல் இருந்தா?

சொல்வாயா ?

நீ எனக்கு .................


இன்னும்காதல் பேசலாம் .......


காதலுடன் அன்பு

பால்கி (BALAKRISHNAN)