Tuesday, July 28, 2009

காதல் என்றால் என்ன ?-2


பதில் கண்ணதாசன்


தமிழர் மனதில் தனிஇடம் பிடித்த தன்னிகரல்லா கலைஞன். தரணியெல்லாம் போற்றும் தனித்துவமான கவிஞன். கண்ணதாசன்

அவரின் மொழி காதலின் அரிசுவடி அதயும் பார்ப்போம்


அவள் இல்லா வாழ்க்கை எப்படி அவனுக்கு இருக்கும்

மிக அழகாக அந்த காதலின் கடவுள் சொல்வதாய் ஒரு பாடல்

""உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலின்


""பேருக்கு பிள்ளையுண்டு -

பேசும்பேச்சுக்கு சொந்தம்

உண்டு -

என்தேவையை யாரறிவார்?

உன்னைப்போல்தெய்வம் ஒன்றே அறியும்!'............


இது அவனுக்கு . அப்படியென்றால் அவளுக்கு ?


"கண்பட்டதால் உந்தன் மேனியிலேபுண்பட்டதோ அதை நானறியேன்புண்பட்ட சேதியை கேட்டவுடன் -

இந்தபெண்பட்ட பாட்டை யாரறிவார்?

என்று துடிக்க செய்வது காதல் என்று காதலுக்கு ஒரு

அருமையான விளக்கம் தருகிறார்

அப்படி இருந்தவர்கள் காலத்தின் கட்டாயத்தில் பிரிந்துவிட்டால்

ஒருவர் மற்றவரை உன்னைச் சொல்லி குற்றமில்லைஎன்னைச் சொல்லி குற்றமில்லை'எங்கிருந்தாலும் வாழ்க

- உன்இதயம் அமைதியில் வாழ்க'' என்று வாழ்த்தும் மனம்

அதுதான் உன்ன்மை காதல் என்று கூறுகின்றார்

என்றும் அன்புடன்

baalki (பாலகிருஷ்ணன்)

Monday, July 27, 2009

காதல் என்றால் என்ன ?




காதல் என்றால் என்ன ?


இந்த கேள்வி பிறந்து எத்தனை காலம் ஆனது என்று எஅருக்கும் தெரியாது.


ஆனால் பதில் ?????




நமக்கு தான் தெரியவில்லை வாழ்ந்து முடித்த மூத்தோர்களை கேட்கலாமா


புரட்சியாளர் PAGUTHARIVU PAGALAVAN பெரியார்


ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்

தொலைநோக்குப் பார்வை தேவை!

காதலித்துப் பார்!-உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்
உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி
இந்த பூக்கள்எல்லாம்காதலை
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும்
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

வைரமுத்துவின் கவிதை தாலாட்டு உங்களுக்காக வழங்கியது

பால்கி (balakrishnan)

Thursday, July 23, 2009

கள்ளிகாட்டு இதிகாசம் -கவிபேரரசு வைரமுத்து



நல்ல விசியம் எங்கே இருந்தாலும் தேடி படிப்பது என்பது எனக்கு பிடிக்கும் அதுபோல் கவிபேரரசு வைரமுத்து அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய இந்த கள்ளிகாட்டு இதிகாசம் என்னை மெய்மறக்க செய்தது கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது!!இதில் ஒரு மேம்பட்ட அந்த கரிசல் மக்களின் வாழ்கை பதிவை பார்க்கலாம் இது!!பகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் இந்த கதையின் அல்ல காவியத்தின் நாயகன் கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மாமனிதன். வாழ்கையின் நிமிர நினைக்கும்போது வந்து அழுத்துகின்ற மலைஅளவு கவலை, சோகம், அதனால் எற்படும் வலி அதனையும் மீறி வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் சோக வரலாறே "கள்ளிகாட்டு இதிகாசம்".".மண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது. அதுமட்டும் அல்ல அந்த கரிசல் மக்களின் வாழ்கையை ஒரு திரைப்படம் போல் பதிவு செய்யும் யூக்தியும் ,கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ள அழகும் நமை ஒருங்கே கட்டிபோடுகின்றனா கிராமத்து வாழ்கையின் சுவாரசியம் இந்த கதையில் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது .பேயதேவரின் இளமை காலம் அவரின் காதல மனைவி அவரின் உழைப்பு தனியாளாய் தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் உழைப்பும் கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும் நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது.பேயதேவரின் மகனின் பாத்திர படைப்பு கிராமத்தில் சண்டியரர்கதிரியும் ஒரு கரடு முரடுஆன வாலிபனின் மொத்த பரிமனாங்களையும் இம்மி பிசகாது பரிமளிக்கிறது . கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செயபவை
காவியத்தின் முடிவு : சிக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து அவரை தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை காலிசெய்ய அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதில் மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க, படாத பாடுபட்டு இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார். அந்த கவிய தலைவனின் வாழ்கை அத்துடேன் முடிகிறது நாவலை படித்து முடிக்கும் போது நம் மீது கரிசல் மண்வாசம் உணரமுடிவது வைரமுத்துவின் மாயஜாலம்

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி(balakrishnan)

Monday, July 13, 2009

இது வாலி -ன்காதல் கடிதம்

எல்லோரும் காதல கடிதம் எழுதலாம் ஆனால் கவிஞ்ஞர்களின் காதல என்பது ரொம்பவும் வித்தியாசமானது எப்படி என்று பார்ப்போமா
இது வாலி -ன் காதல்

"நான் அனுப்புவது கடிதம் அல்ல (வேறு என்னவாம் )
உள்ளம் (ஒ)
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல (பின்ன)
எண்ணம் (அப்டியா எதுக்கு )
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள


எல்லோரும் காதலுக்கு கடிதம் அனுப்பினால்-இவர்
காதலுக்கு உள்ளதையே அனுப்புகிறார் அதுமட்டுமா
அதில் உள்ளதுஎல்லாம் எழுத்தும் அல்லவாம்
அவரது எண்ணங்களை அதில் பதிப்பித்து
ஒரு குறுந்தகடு போல் அனுப்பி உள்ளாராம் இது மட்டுமா
இவையெல்லாம் எதற்கு என்றால்
உன் உள்ளதை கொள்ளை அடிக்கவாம்
இந்த வார்த்தை விளையாட்டில் மயங்காமல் ஒரு பெண் இருக்க இயலுமா

அதோடு விட்டாரா இன்னும் எழுதுகிறார்
அந்த கடிதம் யார் யாருக்கு எழுதுவது
இதோ பதில்
"நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம் "

எழுதி முடித்து பின்குறிப்பு எழுதுகின்றார்

"எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள "

சொல்லவேண்டியதை மீண்டும் மீண்டும்
சொல்லி பதியவைக்கிறார் அது மட்டுமா
உண்மை காதலின் உணர்வுகளை ஒரு காதலனின்
நிலையில் இருந்து சொல்லுவது ஒரு கலை
அந்த கலை இவருக்கு எப்படி பிடிபட்டது
ஓ................இவன் வாலிப கவிஞன்அல்லவா

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்



இன்னும் காதால் படிப்போம்


என்றும் அன்புடன்

உங்கள்

பால்கி(பாலகிருஷ்ணன்)

Wednesday, July 8, 2009

வாழ்கை பற்றி கண்ணதாசன்

அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாமுதலில் நமக்கெல்லாம் தொட்டிலடாகண் மூடினால் காலில்லா கட்டிலடாபிறந்தோம் என்பதே முகவுரையாம்பேசினோம் என்பதே தாய்மொழியாம்மறந்தோம் என்பதே நித்திரையாம்மரணம் என்பதே முடிவுரையாம்ஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாசிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்தீமைகள் செய்பவன் அழுகின்றான்இருப்போம் என்றே நினைப்பவர் கண்களைஇறந்தவன் அல்லவோ திறக்கின்றான்ஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாவகுப்பார் அதுபோல் வாழ்வதில்லைவந்தவர் யாருமே நிலைத்ததில்லைதொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லைதொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடாஆடி அடங்கும் வாழ்க்கையடா---------------

ஆடுபவரை பார்த்தால் இப்படி எல்லாம் பாடிவைத்த கண்ணதாசன் வார்த்தையை நினைக்க தோன்றுகிறது ............................................
இது தான் வாழ்கை ..................................................................................

என்றும் அன்புடன்

பால்கி (பாலகிருஷ்ணன்)

வாழ்கையை பற்றி கண்ணதாசன்

கண்ணதாசன் கவிதை
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்!படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்படித்துப் பாரென இறைவன் பணித்தான்!அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்!அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்மணந்து பாரென இறைவன் பணித்தான்!பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்!இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்!'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
இது தான் வாழ்க்கை எனவே வாழ்கையை வாழ்ந்து அனுபவித்து வெற்றிகொளுங்கள்

என்றும் அன்புடன்
உங்கள் பால்கி (பாலகிருஷ்ணன்)