Monday, July 13, 2009

இது வாலி -ன்காதல் கடிதம்

எல்லோரும் காதல கடிதம் எழுதலாம் ஆனால் கவிஞ்ஞர்களின் காதல என்பது ரொம்பவும் வித்தியாசமானது எப்படி என்று பார்ப்போமா
இது வாலி -ன் காதல்

"நான் அனுப்புவது கடிதம் அல்ல (வேறு என்னவாம் )
உள்ளம் (ஒ)
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல (பின்ன)
எண்ணம் (அப்டியா எதுக்கு )
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள


எல்லோரும் காதலுக்கு கடிதம் அனுப்பினால்-இவர்
காதலுக்கு உள்ளதையே அனுப்புகிறார் அதுமட்டுமா
அதில் உள்ளதுஎல்லாம் எழுத்தும் அல்லவாம்
அவரது எண்ணங்களை அதில் பதிப்பித்து
ஒரு குறுந்தகடு போல் அனுப்பி உள்ளாராம் இது மட்டுமா
இவையெல்லாம் எதற்கு என்றால்
உன் உள்ளதை கொள்ளை அடிக்கவாம்
இந்த வார்த்தை விளையாட்டில் மயங்காமல் ஒரு பெண் இருக்க இயலுமா

அதோடு விட்டாரா இன்னும் எழுதுகிறார்
அந்த கடிதம் யார் யாருக்கு எழுதுவது
இதோ பதில்
"நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம் "

எழுதி முடித்து பின்குறிப்பு எழுதுகின்றார்

"எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள "

சொல்லவேண்டியதை மீண்டும் மீண்டும்
சொல்லி பதியவைக்கிறார் அது மட்டுமா
உண்மை காதலின் உணர்வுகளை ஒரு காதலனின்
நிலையில் இருந்து சொல்லுவது ஒரு கலை
அந்த கலை இவருக்கு எப்படி பிடிபட்டது
ஓ................இவன் வாலிப கவிஞன்அல்லவா

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்



இன்னும் காதால் படிப்போம்


என்றும் அன்புடன்

உங்கள்

பால்கி(பாலகிருஷ்ணன்)

4 comments:

  1. நான் அனுப்புவது கடிதம் அல்ல

    vaalthu

    by nanjundan

    ReplyDelete
  2. ithu mathiri sms iruntha podunga.........
    kaditham palasu...
    sms puthusu.....

    ReplyDelete
  3. "நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
    நீருக்கு மீன் எழுதும் கடிதம்
    மலருக்கு தேன் எழுதும் கடிதம்
    மங்கைக்கு நான் எழுதும் கடிதம் "

    eduvallavo kavithai

    எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
    ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
    என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
    உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

    miga azhagana varigal ennaththin velippattai appattamaga solli irukirar

    ReplyDelete