Thursday, August 20, 2009

நடப்புக்கு ஒரு வணக்கம்

அணிய நல்ல சட்டை இல்லை
அனா காசும் கையில் இல்லை
தலையில் எண்ணெய் இல்லை
தாங்காத வறுமை தொல்லை

ஊர் என்னைஒதுக்கியது
ஓடவிட்டு விரட்டியது
சுற்றம் எல்லாம் என்னை
சுற்றி நின்று ஏளனம் செய்தது

சூனியமாய் வாழ்கை தெரிய
சுடும் தீயாய்உறவு எரிய
செத்துவிட முடிவுஎடுத்து
சென்றேன் கடைவீதி

சாகும் போதும் சுகம் தேடும்
சாமானிய மனிதன் தான் நான்
வலியே இல்லாமல் சாக
வாங்கினேன் தூக்க மருந்து

துக்கம் நெஞ்சு அடைக்க
கண்ணீர் விழி மூட
எடுத்தேன் மருந்தை
என் வாழ்வின் கடைசி விருந்தை

கண்கள் மயங்க கட்சிகள் மறைய
கடைசியாய் ஒரு உருவம் கலங்கலாய்
கண் விழித்து பார்க்கிறேன்
நிற்கின்றன் என் நண்பன்

பத்து நாள் சிகிச்சை
உடலுக்கும் மனதுக்கும்
பயம் தெளியவைத்து
பார்வையை விரியவைத்து

இன்று நான் மனிதனாய்
நிற்கின்றேன் தெளிவாய்
எனக்கு தீர்ந்தது பிணக்கம்
அந்த நடப்புக்கு ஒரு வணக்கம்!

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)Wednesday, August 19, 2009

கண்ணீர் எதற்கு ?


உன் துக்கத்தில் பங்கெடுக்க ஒருவரும் இல்லயா

உன் கண்ணீர் துடைக்க ஒரு விரல் இல்லயா

உன் சோகத்தை சுமக்க ஓர் தோள் இல்லயா

நீ ஓய்ந்து விழும்போது பிடிக்க ஒரு பற்று மரம் இல்லயா

நீ தத்தளிக்கும் போது எட்டிபிடிக்க ஒரு பட்ட மரம் இல்லயா


பாவி நீ என்ன வாழ்ந்தாய் !

பயனில்லா பண்டம் போல

மற்றோர் துக்கத்தில் பங்கெடுக்க நினைத்து உண்டா ?

மற்றோர் கண்ணீர் துடைக்க மனதினில் எண்ணம் உண்டா ?

மற்றோர் சோகத்தை சுமக்க மனம்உண்டா ?

பிறர் ஓய்ந்து விழும்போது ஓடி பிடித்தது உண்டா ?

உன் பதில் "இல்லை" என்றால்


எப்படி நீ அழுவாய்


ஏர் பிடிக்க வரமாட்டாய்

விதைபோடவரமாட்டாய்

நீர் கட்ட வரமாட்டாய்

கதிர் அறுக்க வரமாட்டாய்

பொதி சுமக்க வரமாட்டாய்

ஆனால் .....................................


விளைச்சலில் பங்கு இல்லை என்றால்

வீரிட்டு அழுகின்றாய்

என்ன இது தருமம்


விதைத்தது தான் பலன் தரும்

இன்னும் காலம் இருக்கின்றது

இன்றே அன்பை விதை

வருகின்ற காலம் உனக்கு

வளமான பலனை தரும் ..............


என்றும் அன்புடன்

baalki (பாலகிருஷ்ணன்)

வாழ்வில் வெற்றி எங்கே கிடைக்கும்

வாழ்வில் வெற்றி எங்கே கிடைக்கும் ?
விலை என்ன ?
விற்பவர் யார் ?
எண்ணிக்கையா ?
எடையா ?
படி கணக்கா ?
மொத்தமா ?
சில்லறையா ?
முழு தொகையா ?
தவணை முறையா ?
புரியவில்லை என்று
பல நாளாய் தேடி பலன் ஒன்றும் இல்லை
புத்தன்சயனித்த போதி மரத்தடி
சித்தம் தெளிய சிறிது நேரம் கண் அயர
பொறிகள் கலங்க பொட் என்று ஓர் அடி
பின் மண்டையில் விழுந்தது
பட்ட அடி உணர
பய பந்து நெஞ்சு உருள
சட் என்று விழித்தேன் - எதிரில் புத்தன் அவன்
சம்மணமிட்டு அமர்ந்து சந்தமாய் சிரிகின்றான்
கேள்வி கணைகளை மாலையாய் தொடுத்து
கொடுத்தேன் புத்தனிடம்-
கிழித்து அதை குப்பையில் எரிந்துவிட்டன்
ஏன் என்றேன் -நீ என்றான்
புரியாமல் தயங்கி நின்றேன்
புத்தனே பகறலாணன்
"உனக்குள்ளே உண்டு அது
ஊருக்குள் தேட வேண்டாம்
கையிலே வெண்ணை வைத்து
காடு எங்கும் நெய் தேடும்
மூடனை போல நீ வெளியில் தேடுகின்றாய்
வெற்றியின் ரகசியத்தை ...............

Sunday, August 2, 2009

அவனுக்காய் ஒரு பிராத்தனை

அவனுக்காய் ஒரு பிராத்தனை

கணப்பொழுது உன் கண்களை மூடி -கடந்த
காலத்தை சிந்தனையில் நிறுத்து
உன் வாழ்கை பாதை
உன் உழைப்பு
உன் உயர்வு
உன்செல்வம்
உன் தோல்வி
உன் வெற்றி
உன் கண்ணீர் என
உன் அத்தனைநிகழ்வுகளிலும்
உன்னுடன் உனக்காய் உனதாய் இருந்த
ஒரு உறவு எது என்று யோசித்து பார்
ஏதேனும் ஒரு நண்பன் இருப்பான்
அவனுக்காய் ஒரு பிராத்தனைஇன்றேனும் செய்
அந்த நண்பன் நான் என்றால்
என் பாசத்தின் கண்ணீர்
பரிசாய் உனக்கு இல்லை
என்றாலும் நான் தவம் இருப்பேன் அதற்கு

என்றும் அன்புடன் உங்கள்

பால்கி (பாலகிருஷ்ணன்)