Thursday, August 20, 2009

நடப்புக்கு ஒரு வணக்கம்

அணிய நல்ல சட்டை இல்லை
அனா காசும் கையில் இல்லை
தலையில் எண்ணெய் இல்லை
தாங்காத வறுமை தொல்லை

ஊர் என்னைஒதுக்கியது
ஓடவிட்டு விரட்டியது
சுற்றம் எல்லாம் என்னை
சுற்றி நின்று ஏளனம் செய்தது

சூனியமாய் வாழ்கை தெரிய
சுடும் தீயாய்உறவு எரிய
செத்துவிட முடிவுஎடுத்து
சென்றேன் கடைவீதி

சாகும் போதும் சுகம் தேடும்
சாமானிய மனிதன் தான் நான்
வலியே இல்லாமல் சாக
வாங்கினேன் தூக்க மருந்து

துக்கம் நெஞ்சு அடைக்க
கண்ணீர் விழி மூட
எடுத்தேன் மருந்தை
என் வாழ்வின் கடைசி விருந்தை

கண்கள் மயங்க கட்சிகள் மறைய
கடைசியாய் ஒரு உருவம் கலங்கலாய்
கண் விழித்து பார்க்கிறேன்
நிற்கின்றன் என் நண்பன்

பத்து நாள் சிகிச்சை
உடலுக்கும் மனதுக்கும்
பயம் தெளியவைத்து
பார்வையை விரியவைத்து

இன்று நான் மனிதனாய்
நிற்கின்றேன் தெளிவாய்
எனக்கு தீர்ந்தது பிணக்கம்
அந்த நடப்புக்கு ஒரு வணக்கம்!

என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)















































1 comment:

  1. //கட்சிகள் மறைய //

    கட்சிகள் அல்லது காட்சிகள்?

    நல்ல கவிதை.. ஆனால் ஏனிந்த சோகம்?

    ReplyDelete