Tuesday, October 20, 2009

முடிந்த உதவியைச் செய்யுங்கள்



  1. முடிந்த உதவியைச் செய்யுங்கள்
    அக்டோபர் 19,2009,15:35 IST
    * இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது.
    * மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.* யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.* ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள். * மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும். -விவேகானந்தர்

என்றும் உங்கள் அன்பான
பால்கி

1 comment: