Tuesday, November 3, 2009

கொஞ்சம் காதல் பேசுவோம் தோழி


என்று நாம் சந்தித்தோம் ?

எங்கு நாம் சந்தித்தோம் ?

என்று உனக்கு நினைவு உள்ளதா

அன்று நீ அணிந்து இருந்த கைவளை

நிறம் கூட எனக்கு நினைவில் உள்ளது


உன் கண்களை பார்க்க கூட எனக்கு துணிவு இல்லை

ஆகவே உன் கைகளை பார்த்தேன்

முதலில் பேசிய போது என் எல்லாகேள்விக்கும்

மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாய்


ஆனால் உன் மௌன ஆயுதத்தின் முன்

என் எல்லா படைகளும் செயல் அற்று போனது

உன் நாணவிழிகளின் முன் நான் ஒரு அடிமை போல்

செயல் அற்று விழுந்தேன்


உன் பேச்சின் மென்மை என்னை

பலமாய் தாக்கி காயபடுதியது

ரணம் வலிக்கும் -ஆனால் உன்னால் பட்ட ரணம்

எனக்கு இனித்தது என்று உனக்கு தெரியாது


முதன் முதலாய் உன் விரல் தொட்ட சமயம்

முழுதாய் ஒரு பூகம்பம் என் இதயத்தில் உணர்ந்தேன்

பல நூறு வார்த்தை கொண்டு ஒரு

கவிதை மலை தொடுப்பேன்


உன்னிடம் கொடுக்க ஓடி நான் வருவேன்

என் செய்ய உன் விழி என்னும்

ஏவுகனை பட்டவுடன் கவிதை

வரியாய் ........

வார்த்தையாய்...........

எழுத்தாய் .............

கோடாய்..............

புள்ளியாய்..........மாறி

மறைந்து போகின்றது



உனக்கும் இது போல் இருந்தா?

சொல்வாயா ?

நீ எனக்கு .................


இன்னும்காதல் பேசலாம் .......


காதலுடன் அன்பு

பால்கி (BALAKRISHNAN)

4 comments:

  1. hayyo semaya irukunga i want this . how to i get it

    ReplyDelete
  2. மிக நன்றாக சொன்னீர்கள் CUDDALORE K RAJA MOHAN.

    ReplyDelete