Monday, November 16, 2009

கனவுகளின் களம்


காதல் என்பது கனவுகளின் களம்
அதில் தப்பி செல்ல எனக்கு இல்லை பலம்
தேர்ந்த நடிகனை போல் இமை நடிக்கும்
திறந்து இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கும்
திறந்தா விழி முன் ஒரு திரை விரியும்
திங்கள் போல் உந்தன் விழி தெரியும்

பூ , புற , புல்வெளி ,பனித்துளி, மட்டுமல்ல
பொசுக்கும் வெயில் , பொல்லா மாலை
எல்லாவற்றிலும் உன் முகம்
கொல்லாமல் கொல்லுதடி
நில்லாமல் என் நினைவு
உன் பின்னாலே செல்லுதடி

தூக்கமே இல்லையடி
இதயம் துடிப்பதும் இல்லையடி
உன் நினைவை குடிப்பது ஒன்றுமட்டும்
என் வேலையாய் ஆனதடி

படித்ததும் மறந்ததடி
பார்வையில் பழுது ஒன்றும் இல்லையடி
நினைத்தது ஒன்று இருக்க
செய்யும் செயல் வேறு ஆனதடி

கனவுகள் மட்டும் வாழ்வதனால்
காதலை எனக்கு பிடிகின்றது
கண்மணி உனக்கும் இதுபோல
கனவுகள் உண்ட சொல்வாயா
காதலுடன்
பால்கி(balakrishnan)

3 comments: